
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில், வடகிமனா பகுதியை சேர்ந்த அப்துல் அல்தீப் என்ற ஆட்டோ டிரைவர், அங்குள்ள பஸ் நிலையத்தில் ஆட்டோவில் பயணிகளை ஏற்றிக்கொண்டிருந்தபோது, அவர்மீது மூன்று தனியார் பஸ் ஊழியர்கள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் அவரது ஆட்டோவை துரத்தி சென்று வழிமறித்த பிறகு, அவரை கீழே இறங்க வைத்து சரமாரியாக தாக்கினர்.
இந்த தாக்குதலால் படுகாயமடைந்த அப்துல், தன்னுடைய ஆட்டோவை மலப்புரம் மருத்துவமனை அருகே நிறுத்தி, சுயமாக நடந்து செல்ல முயன்றார். ஆனால் உடல் நிலை மிகவும் மோசமானதால், நடந்து செல்லும் போதே அவர் திடீரென கீழே விழுந்து விட்டார். இதைப் பார்த்த மருத்துவ ஊழியர்கள் விரைந்து சென்று அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அப்துல் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தாக்குதலில் ஈடுபட்ட முகமது நிஷாந்த், சுஜிஸ், சிஜு ஆகிய மூவரையும் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது