மேட்ரிமோனியில் ஆண் மாடல்களின் போட்டோவை பதிவிட்டு 250 க்கும் மேற்பட்ட பெண்களிடம் பண மோசடியில் ஈடுபட்ட ராஜஸ்தானை சேர்ந்த மோசடி மன்மதனை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் செல்போனில் மாப்பிள்ளை போலவும் நேரில் மாப்பிள்ளையின் மாமா எனவும் கூறி மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். விவாகரத்து பெண்கள் மற்றும் விதவைகளை குறிவைத்து அவர்களிடம் ஆசையாக பேசி பணம் பறித்து விட்டு போனை சுவிட்ச் ஆப் செய்வது இவரின் வாடிக்கை. தற்போது இவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இது போன்றவர்களை நம்பி ஏமாறாமல் உஷாராக இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.