உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், தன்னைத் திருமணம் செய்துகொள்ள மறுத்த காதலியை, ஒரு இளைஞன் கத்தியால் கழுத்தறுத்துக் கொன்ற கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
லக்னோ மாவட்டம், மோகன்லால் கஞ்ச் பகுதியைச் சேர்ந்த அலோக் என்ற இளைஞருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 19 வயது பிரியான்ஷி என்ற இளம்பெண்ணுக்கும் இடையே காதல் இருந்துள்ளது.
கடந்த சில நாட்களாகக் காதலர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்துள்ளது. இந்நிலையில், அலோக் இன்று பிரியான்ஷியின் வீட்டிற்குச் சென்று, திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டுள்ளார்.
பிரியான்ஷி இதற்கு மறுப்பு தெரிவித்ததால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. ஆத்திரமடைந்த அலோக், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரியான்ஷியின் கழுத்தை அறுத்துள்ளார்.
இரத்த வெள்ளத்தில் சரிந்த பிரியான்ஷி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பிரியான்ஷியைக் கொன்றுவிட்டுத் தப்பி ஓடிய காதலன் அலோக்கை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
