தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 1000-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் 400-க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளது.  இந்நிலையில் பேரூராட்சி செயல் அலுவலர் நாகராஜன் தலைமையில், அலுவலர்கள் வரி வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வரி செலுத்தாமல் இருந்த திருமண மண்டபம் ஒன்றை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

இதுகுறித்து செயல் அலுவலர் நாகராஜன் கூறியதாவது, பேரூராட்சி நிர்வாகத்துக்கு ரூ.8 லட்சத்து 74 ஆயிரம் வரி நிலுவைத் தொகை இருக்கிறது. எனவே வரியை செலுத்தக்கோரி பலமுறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் பொதுமக்கள் உரிய வரியை செலுத்தவில்லை. வருகிற 10-ந் தேதிக்குள் வரி நிலுவை தொகையை செலுத்தவில்லை என்றால்  ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.