ஹமாஸ் அமைப்பினரை பொறுத்தவரை 36 வருடம் வரலாறு  இருக்கிறது. அவர்களிடம் வெறும் 40 ஆயிரம் படை வீரர்கள் மட்டுமே இருக்கிறார்கள். உலகில் அதிசக்தி வாய்ந்த ராணுவங்களில் ஒன்றாக இஸ்ரேலிய ராணுவம் இருக்கிறது.  அவர்களிடம் நவீன ரக போர் விமானங்கள் இருக்கின்றன. நவீன போர் கப்பல்,  டிபன்ஸ் சிஸ்டம் இருக்கின்றது. மேலும் 3.60 லட்சம் இஸ்ரரேலியா வீரர்கள் தற்போது  முற்றுகையிட்டு வருகிறார்கள். எனவே இஸ்ரேலை ஒப்பிடும்போது ஹமாஸின்   பலம் மிகவும் சொற்பம் என்று சொல்ல வேண்டும்.

ஹமாஸ் போராளிகளின் பலம் என்று குறிப்பிடுவது அவர்களுடைய சுரங்கப்பாதை தான். சுரங்கத்தில் இருந்தும்,  பதுங்கு குழிகளில் இருந்தும் ஏவுகணைகளை தாக்கி அதன் மூலம் தாக்குதல் நடத்தும் வியூகம் தான் அவர்களுடைய முக்கியமான வியூகம். இந்நிலையில் அவர்களுடைய ஆயுதக் கணக்குகள் மற்றும் சுரங்கப்பாதைகளையும் குறிவைத்து இஸ்ரேலிய ராணுவம் தாக்குதல் நடத்திக் கொண்டு வருகிறார்கள்.

குறிப்பாக அம்மாஸ் அமைப்பினர் அதிகமாக நடமாடும் பகுதிகள் என காசா நகரத்தில் 450 இடங்களை குறி வைத்து விமானப்படையின் மூலம் தாக்குதல் நடத்துவதாகவும் கூறப்படுகிறது. ஹமாஸ் அமைப்பினரிடம் ராணுவ பலம் என்று குறிப்பிடும்படி என்று இல்லை. அவர்களிடம் ஏவுகணைகள் உள்ளன. அவர்களிடம் கையேறி குண்டுகளும்,  துப்பாக்கிகள்,  கண்ணீர்  வெடி குண்டுகள் போன்றவை இருப்பதாக கூறப்படுகிறது.

ஈரான், லெபனான், ஜோடான் போன்ற நாடுகளில் இருந்து செயல்படும் போராளி அமைப்புகள் மூலம் ஹமாஸ்  அமைப்பினருக்கு தொடர்ச்சியாக ஆயுதங்கள் வழங்கப்படுகின்றன. அந்த ஆயுதங்கள் மட்டுமே அவர்களிடம் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இஸ்ரேல் ராணுவத்திடம் தொடர்ச்சியாக போரிடும் அளவிற்கு அவர்களிடம் ராணுவ தளவாடங்களோ, யுக்திகளோ இல்லை என்று தான் கூற வேண்டும்.