இஸ்ரேல் காசா நகரத்தின் மீது தரைவழி தாக்குதலை ஒரு பக்கம் நடத்திவரும் நிலையில், வேஸ்ட் பேங்க் என சொல்லப்படும் மேற்கு கரை பகுதிகளில் கைது நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகிறார்கள். ஹமாஸ் அமைப்பின் அனைத்து விதமான நடவடிக்கைகளையும் முடக்குவது, ஹமாஸ் அமைப்பை முற்றிலுமாக அழிப்பது, அவர்களுடைய ஆயுதக்கடங்குகள், நிதி ஆதாரங்கள், அவர்கள் தலைவர்கள் வசிக்கும் பகுதிகள்,  தலைமை அலுவலகங்கள் அத்தனையும் தேடி தேடி அழித்து  வருகிறார்கள்.

மேற்கு கரை பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் செல்வாக்காக இருக்கும் சில இடங்களை குறி வைத்து கைது நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஹமாஸ் அமைப்பினரும் அந்தப் பகுதியில் இருந்து சில தாக்குதலையும் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இஸ்ரேலின் பீரங்கிகள் நூற்றுக்கணக்கில் தற்போது காசாவின் எல்லைப் பகுதியில் நுழைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காசாநகரத்தில் விமான தாக்குதல் கடந்த மூன்று நாட்களாக இஸ்ரேல் ராணுவம் நடத்திவரும் நிலையில், பீரங்கிகள் மூலம் தரை தாக்குதலையும் தொடங்கி வருகிறது. ஒரு பக்கம் தரைவழி தாக்குதல் நடத்தி வந்தாலும்,  மறுபுறம் மேற்கு கரையில் கைது நடவடிக்கைகளிலும் ஹமாஸ் அமைப்பினரின் மீது ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஹமாஸ் அமைப்பினர் என்று கூறி அப்பாவி பாலஸ்தீன மக்களையும் இஸ்ரேல் ராணுவம் கைது செய்து வருவதாக பாலஸ்தீன வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளது.  இதுவரை 49 பேர் சந்தேகத்திற்குட்பட்டவர்கள்  கைது செய்துள்ளதாகவும்,  அதில் 33 பேர் ஹாமாஸ் போராளிகள் என்பதை உறுதி செய்துள்ளதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.