மேற்கு கரையில் உள்ள ஜூ டியா, சமாரியா நகரங்களில் இஸ்ரேல் ராணுவம்  தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.

இஸ்ரேல் நாட்டின் ஒட்டுமொத்த எல்லையில் இரண்டு தனி தனி தீவுகளாக அமைந்துள்ளது காசாவும்.  மேற்கு கரையும் பகுதியும்.  இஸ்ரேல் நாட்டில் யூத மக்கள் வசிப்பார்கள். அதே போன்று காஸாவிலும்,  மேற்கு கரை பகுதியிலும் பாலஸ்தீன மக்கள் அதிகமாக வசிக்கிறார்கள். 1973 க்கு பிறகு இஸ்ரேல் உடைய கட்டுப்பாட்டு பகுதியாக மேற்கு கரை பகுதியாக மாறியது.

இந்தப் பகுதியில் பாலஸ்தீனர்கள் அதிக அளவில் வசிக்கின்றார்கள். காசா பகுதியில் 9ஆவது நாள் போர் உச்சமாக நடைபெற்று வருகிறது. ஆனால் மேற்கு கரை பகுதிகளில்  அமைதியான சூழ்நிலை நிலவுவதாகவே கூறப்பட்டுள்ள நிலையில்,  அங்கிருக்கும் ஹமாஸ்  அமைப்பினரை தேடி தேடி கைது செய்து வருவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

பயங்கரவாதத்தை முறியடிப்பதற்கும்,  ஆயுதங்களை பறிமுதல் செய்வதற்கும் மேற்கொள்ளப்பட்டுள்ள விரிவான கைது நடவடிக்கையின் முடிவில் மேற்கு கரையில் உள்ள ஜூடியா, சமாரியா நகரங்களில் தேடப்படும் 49 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்  என்றும்,  அவர்களின் 33 பேர் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்றும் இஸ்ரேலிய பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.