அமெரிக்காவை சேர்ந்த லூயிஸ் க்ளுக் என்பவர் புகழ்பெற்ற பெண் கவிஞர் ஆவார். இவரது தனித்துவமான படைப்புகளின் மூலம் உலகம் முழுவதிலும் இவர் பெயர் பெற்றவர். அமெரிக்காவின் புத்தக விமர்சனங்கள் விருது, புவிசார் விருது போன்றவற்றை பெற்ற கவிஞர் லூயிஸ் லுக் அந்நாட்டின் அரசவை கவிஞராகவும் இருந்துள்ளார்.

இவரது இலக்கியச் சேவையை பாராட்டும் விதமாக 2020 ஆம் ஆண்டு இவருக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்டது. இந்நிலையில் 80 வயதான இவர் புற்றுநோயால் மரணம் அடைந்துள்ளார். ஆசிரியரும் நன்கொடையாளரும் மனிதநேயமிக்கவருமான இவரது மரணம் அந்நாட்டு மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.