கடந்த ஏழாம் தேதி முதல் தொடர்ந்து 9 நாட்களாக இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நீடித்து வரும் நிலையில் மும்முனை தாக்குதலை காசா மீது இஸ்ரேல் நடத்த தயாராகியுள்ளது. இதனால் பாலஸ்தீனர்கள் உடனடியாக தெற்கு பகுதிக்கு செல்லுமாறு கடந்த 13ஆம் தேதியிலிருந்து இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்து வருகிறது. இதையடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து வரும் நிலையில் மீண்டும் இஸ்ரேல் பாதுகாப்பு படை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக இஸ்ரேல் செய்தி தொடர்பாளர் கூறுகையில் “கடந்த சில நாட்களாக காசா நகரை சேர்ந்த மக்கள் தெற்கு பகுதிக்கு சென்று விடுமாறு கோரிக்கை விடுத்து வருகிறோம். அட்டின் தெரு வழியில் காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை இஸ்ரேல் பாதுகாப்பு படை எந்த ஒரு தாக்குதலும் மேற்கொள்ளாத. இதனை பயன்படுத்தி மக்கள் தெற்கு பகுதிக்கு சென்று விடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. உங்கள் பாதுகாப்பும் உங்கள் குடும்பத்தின் பாதுகாப்பும் மிகவும் முக்கியம் என்பதால் தயவுசெய்து எங்கள் ஆலோசனையை கேட்டு தெற்கு பகுதிக்கு சென்று விடுங்கள். ஹமாஸ் ஆயுதக் குழு தலைவர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் அவர்களது பாதுகாப்பை உறுதி செய்து விட்டார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.