ஹமாஸ் – இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4ஆயிரத்தை தாண்டியது என தகவல் வெளியாகி உள்ளது.

காசாவின் வடக்கு பகுதியில் உள்ள மக்கள் தெற்கு பகுதிக்கு செல்ல மூன்று மணி நேரம் பாதை திறப்பு என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இந்திய நேரப்படி 12.30 முதல் 3. 30 வரை பாதுகாப்பான வழித்தடத்தில் தாக்குதல் நடத்த போவதில்லை என  இஸ்ரேல், பாலஸ்தீனம் மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கி உள்ளது. பைட் ஹலோன் – கான் யூனிஸ் வழித்தடத்தில் மூன்று மணி நேரம் எவ்வித தாக்குதலும் நடத்தப்படாது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

காசாவில் முப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. எல்லையில் இஸ்ரேல் தரை படை வீரர்கள் தொடர்ந்து குவிக்கப்பட்டு வருகின்றனர். விரைவில் காசாவில் தரைவழி தாக்குதல் இஸ்ரேல் ஈடுபடுவதற்கான சூழல் உருவாகியுள்ளது. இஸ்ரேல் படைகளுக்கு உதவும் வகையில் ஆயுதங்களுடன் 2ஆவது விமானத்தை அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது.

முன்னதாக இந்த போரில் இதுவரை 13,000க்கும் அதிகமானோர் காயமடைந்து சிகிச்சைக்காக காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஹமாஸ் நடத்திவரும் தாக்குதலில் 13,00 யூதர்கள் படுகொலை செய்யப்பட்டதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. காசா நகரில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் 2,215 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு, 8,714 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர் என பாலஸ்தீன வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.