இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் என்பது ஒன்பதாவது நாளாக நீடித்து வருகிறது. கடந்த வாரம் சனிக்கிழமை இந்த போர் ஏற்பட்டது. அப்போது முதல் தீவிரமாக இந்த யுத்தம் நடைபெற்று வருகிறது. வடக்கு காசா மீது இஸ்ரேலின் முப்படைகள் தாக்குதல் நடத்த  தயார் நிலையில் இருப்பதால் பெரும் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது.வடக்கு காசா பகுதியை குறிவைத்து இந்த தாக்குதல் ஆனது மேற்கொள்ளப்பட இருக்கிறது.

அதன் காரணமாக வடக்கு காசா பகுதியில் வசிக்கக்கூடிய மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அதற்குப் பிறகு தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால் அங்கு மிகப்பெரிய பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. வான்வெளி தாக்குதலை தொடர்ந்து தரைவழி தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தி உள்ளதால் பலி எண்ணிக்கை இன்னும் உயர வாய்ப்பு இருப்பதாகவும், இந்த தாக்குதல் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்,  பல உயிரிழப்புகளை ஏற்படுத்தும், மிகப்பெரிய சேதாரத்தை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.