
புதுச்சேரி மாநிலத்தில் வருகின்ற மார்ச் ஒன்பதாம் தேதி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரையுடன் தொடங்குகின்றது. வருகின்ற மார்ச் ஒன்பதாம் தேதி காலை 9.45 மணிக்கு பட்ஜெட் கூட்டத்தொடர் கூட உள்ளதாகவும் அதற்கான கோவிலுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் சட்டப்பேரவை செயலகம் தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் வருகின்ற மார்ச் ஒன்பதாம் தேதி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரையுடன் தொடங்குகிறது.
புதுச்சேரியில் கடந்த 12 வருடங்களாக மார்ச் மாதம் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக மார்ச் மாதம் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு வந்த நிலையில் பட்ஜெட்டிற்கான திட்ட குழு கூட்டத்தில் பட்ஜெட் தொகையாக 11 ஆயிரத்து 600 கோடி ரூபாய் நிர்ணயத்தை மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது கடந்த ஆண்டு பட்ஜெட்டை விட ஆயிரம் கோடி ரூபாய் அதிகம் என கூறப்படுகிறது.
கடந்த 12 ஆண்டாக பல்வேறு இடையூறுகளால் மார்ச் மாதம் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டு முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய முதல்வர் ரங்கசாமி நடவடிக்கை எடுத்துள்ளார். எனவே இந்த பட்ஜெட்டில் பல திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.