உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முன்னேறி இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என பார்டர் கவாஸ்கர் டிராபியை தக்க வைத்துக் கொண்டது. மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூரில் நடைபெற்றது. அதில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 109 ஆஸ்திரேலியா 197 ரன்கள் எடுத்தது. இரண்டாம் நாள் முடிவில் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 163 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதில் வெற்றியை தக்க வைத்து ஆஸ்திரேலியா அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முன்னேறியது.

ஆஸ்திரேலியா அணி ஆறு வருடங்களுக்குப் பிறகு இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது. கடைசியாக 2017 ஆம் ஆண்டு புனையில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து வருகின்ற மார்ச் 9 முதல் 13ஆம் தேதி வரை நான்காவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியை பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி நேரில் பார்வையிட கூடும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. எனவே இந்த போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது