புதுச்சேரியில் நடந்த தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) பொதுக்கூட்டத்தில், கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது மற்றும் ‘பாஸ்’ வழங்குவது தொடர்பாக, அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்திடம் ஆவேசமாகக் கேள்வி எழுப்பிப் பேசிய ஐ.பி.எஸ். அதிகாரி இஷா சிங் தற்போது வைரலாகி வருகிறார். 1995-ஆம் ஆண்டு மும்பையில் பிறந்த இவர், வெறும் 26 வயதிலேயே ஐ.பி.எஸ். அதிகாரியானவர்.

இஷா சிங்கின் தந்தை யோகேஷ் பிரதாப் சிங், ஒரு நேர்மையான ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார். தந்தையின் வழியில் வந்த இஷா சிங், பெங்களூருவில் உள்ள தேசிய சட்டக் கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று, முதலில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

 

View this post on Instagram

 

A post shared by Sun News Tamil (@sunnews)

அப்போது, செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் போது இறந்த தொழிலாளர்களின் விதவைகளுக்கு இழப்பீடு பெற்றுத் தந்தது உள்ளிட்டப் பல சமூக நல வழக்குகளில் வெற்றி கண்டுள்ளார்.

2021-ஆம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாகப் பணி நியமனம் பெற்ற இஷா சிங், தற்போதுப் புதுச்சேரி கிழக்கு மண்டலத்தின் புதிய எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

எந்தப் பாரபட்சமும் இன்றிப் பாதுகாப்பு நடைமுறைகளைக் கடுமையாக அமல்படுத்துவதிலும், விதிமுறை மீறல்களில் பூஜ்யச் சகிப்புத்தன்மையுடனும் செயல்படும் இவருக்குச் சக அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நல்ல பெயர் உள்ளது.