தஞ்சை பெரிய கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். அதுவும் விடுமுறை தினம் என்றால் வெளிமாவட்டம் மட்டுமில்லாமல் வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கோவிலுக்கு வந்து செல்வார்கள். இந்நிலையில் தஞ்சை பெரிய கோவிலில் இந்த ஆண்டின் முதல் பிரதோஷம் விமர்சையாக நடைபெற்றது.

பிரதோஷத்தை முன்னிட்டு சிவ பெருமானுக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், திருநீறு உள்ளிட்ட ஒன்பது வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதனையடுத்து சிறப்பு அலங்காரம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. பிரதோஷ விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.