சமூக ஊடகங்களில் தினசரி பெரும்பாலான வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே பார்வையாளர்களை கவர்கிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோகளுக்கு  இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். தற்போது குரங்குகளின் ஒரு அழகிய வீடியோவானது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் நபர் ஒருவர் தன் செல்போனை குரங்குகளுக்கு காட்டுவதை பார்க்க முடிகிறது. அப்போது குரங்குகள் மொபைல் காட்சியை ஆர்வத்துடன் உற்றுநோக்குகிறது. இவ்வாறு செல்போன் மீதான குரங்குகளின் ஆர்வத்தை வீடியோவில் காண முடிகிறது.