கிறிஸ்மஸ் தாத்தா வருடம் தோறும் அவர்களின் செயல்பாடுக்கு ஏற்ப பரிசு வழங்கி வருவதாக உலகம் முழுவதும் எண்ணற்ற குழந்தைகள் நம்பி வருகின்றனர். அந்த நம்பிக்கையின் ஒரு பகுதியாக பிஸ்கட், கேரட் போன்ற கிறிஸ்துமஸ் மரம் அருகே வைக்கப்படும் தின்பண்டங்களையும் சாண்டா தான் சாப்பிடுவதாக அவர்கள் எண்ணுகின்றனர்.

ஆனால் அமெரிக்காவை சேர்ந்த சிறுமி பிஸ்கட்டை சாப்பிட்டது உண்மையில் கிறிஸ்துமஸ் தாத்தாவா? இல்லையா? என்பதை DNA பரிசோதனை செய்து விளக்க வேண்டும் என காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இதற்காக அவர் மீதமான கேரட் மற்றும் பிஸ்கட் பாகங்களை பேக் செய்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார். சிறுமியின் வினோதமான புகாரும் கோரிக்கையும் பேசு பொருளாக மாறியுள்ளது.