உலகம் முழுவதும் ஐடி துறையில் சமீபகாலமாகவே  வேலையிழப்புகள் அதிகரித்துள்ளன. பல முன்னணி நிறுவனங்களும் ஊழியர்களை அடுத்தடுத்து பணிநீக்கம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த மாதத்தில் மட்டும் தினம் தினம் சுமார் 3000 ஊழியர்களுக்கு பணியிழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆய்வு தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், இசை ஸ்ட்ரீமிங் தளமான ஸ்பாடிஃபையும் தனது 6% ஊழியர்களை பணி நீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது.

செயல்திறன்களை மேம்படுத்தும் முயற்சியாக, நிறுவனத்தில் உள்ள 10,000 ஊழியர்களில் 600 பேரை பணி நீக்கம் செய்ய ஸ்பாடிஃபை முடிவு செய்துள்ளது. பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு தொகுப்பூதியம், மருத்துவ காப்பீடு உள்ளிட்டவற்றை வழங்குவதாகவும் அந்நிறுவனம் உறுதியளித்துள்ளது. இதனால் ஊழியர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.