
கிழக்கு மலேசியா சர்வ மாநில துணைத்தலைவர் ஆவான் டெங்கா. இவர் தற்போது தமிழகத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் பாபநாசத்திற்கு வந்த ஆவான் டெங்கா அங்கு ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற அப்துல் லத்தீப் (89) என்பவரை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்துல் லத்தீப் மலேசியாவில் 55 வருடங்களாக ஆசிரியராக பணிபுரிந்தவர். கடந்த 1968-ல் அப்துல் லத்தீப் ஆவான் டெங்காவுக்கு ஆசிரியராக இருந்துள்ளார்.
இதன் காரணமாக தற்போது ஆவான் டெங்கா தமிழகத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் தனக்கு பாடம் எடுத்த ஆசிரியரை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்துல் லத்தீப்பை சந்தித்து நலம் விசாரித்த பிறகு அவர் ஒரு சிறந்த ஆசிரியர் என ஆவான் டெங்கா கூறினார். மேலும் தனக்கு பல வருடங்களுக்கு முன்பு பாடம் எடுத்த ஆசிரியரை தற்போது ஆவான் டெங்கா சந்தித்து வாழ்த்து பெற்றிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.