
சேலம் மண்டல அளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்ட பணிகள் தொடர்பாக மாவட்ட வாரியாக முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். அதோடு பல துறைகளின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள், செலவினங்கள் பற்றியும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வுக்கு பிறகு முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகள் மத்தியில் உரையாற்றியபோது “மக்களாட்சி தத்துவத்தில் நம்பிக்கை வைத்திருக்கும் இந்த அரசு, மக்களின் குறைகளை தீர்ப்பதற்கும் முக்கியத்துவம் அளிப்பதை உணர்ந்து அதிகாரிகள் செயல்பட வேண்டும்.
மக்கள் கொடுக்கும் மனுக்களை வெறும் காகிதமாக மட்டும் கருதாமல் அவர்களின் வாழ்வாதாரமாக நினைத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கிராம மக்களுக்குரிய அடிப்படை வசதிகளை முறையாக தரமாக செய்து தர வேண்டும். அதிகாரிகள் தான் அரசின் முகமாக மாவட்டங்களில் பணிபுரிகின்றனர். ஆகவே அதிகாரிகள் கடினமாக உழைத்தால் பொதுமக்களுக்கு பயன் கிடைக்கும்” என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.