தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஜனவரி, பிப்ரவரி (2023) மாதங்களில் மாவட்ட அளவிலான தமிழக முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நடைபெற இருக்கிறது. இந்நிலையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாதன் ரெட்டி செய்திகுறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவற்றில் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க நாளை 17ஆம் தேதி கடைசி நாள் என தகவல் தெரிவித்துள்ளார். ஆகவே ஆர்வம் உள்ள விளையாட்டு வீரர், வீராங்கனைகள் www.sdat.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றும் இந்த செய்தி குறிப்பில் அறிவுறுத்தியுள்ளார்.