தற்போது கோடை காலம் நெருங்கி வருவதால் தினசரி மின்நுகர்வும் அதிகரித்து வருகிறது. அதன்படி கடந்த 16ஆம் தேதி தமிழகத்தில் ஒரே நாளில் 18,053 MW மின்நுகர்வு ஏற்பட்டுள்ளது. இருந்தபோதும் எந்த தடையும் இன்றி மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. வரும் காலத்தில் மின் நுகர்வு மேலும் அதிகரிக்கும் என்பதால் பொதுமக்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் தற்போதைய மின்தேவை 16,500 மெகாவாட்டில் இருந்து 17,500 மெகாவாட் வரை இருக்கிறது. இது வருகிற ஏப்ரலில் மேலும் அதிகரித்து 17,000 மெகாவாட்டில் இருந்து 18,100 மெகாவாட்டாக உயரலாம் என மின்சார வாரியமானது தெரிவித்துள்ளது