
மகாராஷ்டிராவில் சட்டப்பேரவை தேர்தல் கடந்த 20ஆம் தேதி நடைபெற்றது. மொத்தம் உள்ள 288 தொகுதிகளும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றியாளர் அறிவிக்கப்பட்டனர். அதில் 132 இடங்களில் பாஜக முன்னிலை இருந்தது. 55 இடங்களில் ஷிண்டே சிவசேனாவும், 41 இடங்களில் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸும் முன்னிலையில் இருந்தது.
மறுபுறத்தில் காங்கிரஸ் 16 இடத்திலும், உத்தவ் சிவசேனா 21 இடத்திலும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 10 இடங்களிலும், சமாஜ்வாடி 2 இடங்களிலும் முன்னிலையில் இருந்தது. இதில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தை கட்சி சேர்ந்த சுனில் லக்ஷ்மண்ராவ் வேகேகர், போகர்தன் தொகுதியில் போட்டியிட்டார். வாக்குகள் என்ன பட்டதில் அவர் வெறும் 105 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை சந்தித்தார். இதன் மூலம் அவர் 1,28,375 வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். மேலும் அந்த தொகுதியில் நோட்டாவுக்கு 727 வாக்குகள் விழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.