மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் பகுதியை சேர்ந்த 50 வயது பெரியவர் ஒருவர் தனது மனைவியை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டதில் சில தகவல்கள் தெரியவந்துள்ளது. அதாவது 50 வயது கணவர் தனது 37 வயது மனைவி வேறொருவருடன் தொடர்பில் இருப்பதாக நினைத்து தொடர்ந்து சண்டையிட்டு வந்துள்ளார்.

சம்பவத்தன்று இரவு மீண்டும் கணவன் மனைவி இருவர் இடையே வாக்குவாதம்  முற்றிய  நிலையில் கணவர் சுத்தியலால் மனைவியின் தலையை உடைத்து கொலை செய்துள்ளார். அதன் பிறகு மனைவியை கொன்று விட்டோமே என்ற உறுத்தலில் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சமயத்தில் தம்பதியின் 14 வயது மகள் மற்றொரு அறையில் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். மனைவி மீது சந்தேகம் கொண்டு இப்படி ஒரு கோர சம்பவம் நடந்திருப்பது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.