இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் தபால் நிலையங்களில் உள்ள பல திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள். குறைவான காலத்தில் அதிக லாபம் தரும் பல்வேறு திட்டங்கள் வழங்கப்பட்டு வருவதால் அதிக அளவில் வாடிக்கையாளர்கள் இந்திய தபால் துறையில் கணக்கு தொடங்குகின்றனர். அதன்படி முதிர்வு காலத்தில் 20 லட்சம் ரூபாய் வரை லாபம் தரக்கூடிய கிராமப்புற அஞ்சல் நிலையம் காப்பீட்டு திட்டம் உள்ளது. இந்த திட்டத்தில் 19 வயது முதல் 45 வயது உடைய அனைவரும் முதலீடு செய்யலாம்.

இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் மற்றும் 20 ஆண்டுகள் என்ற அடிப்படையில் தங்களால் முடிந்த தொகையை முதலீடு செய்யலாம். இந்த பாலிசி திட்டம் முடிவடைவதற்கு முன்பாக செலுத்திய பணத்தை திரும்ப பெற விரும்பினால் 60% தொகையை பெற்றுக் கொள்ளலாம். மீதமுள்ள 40% உதிர்வு தொகையை பாலிசி முதிர்வு கால முடிந்த பிறகு தான் பெற முடியும். ஒருவர் இந்த திட்டத்தில் 20 ஆண்டுகளுக்கு தினசரி 95 ரூபாய் வீதம் மாதம் தோறும் 2250 முதலீடு செய்தால் 20 ஆண்டுகள் பாலிசி முதல்வர் காலத்தில் 13.72 லட்சம் உங்களுக்கு கிடைக்கும். எனவே முதிர்வு காலத்தில் பயன் பெறும் வகையில் நீங்கள் சேமிக்க நினைத்தால் இந்த திட்டத்தில் இணைந்து பயன் பெறுங்கள்.