சிவராத்திரி என்பது சிவனுக்கு நடத்தப்படும் சாதாரணமான விழா அல்ல. இது மனதையும் புத்தியையும் கட்டுப்படுத்தக்கூடிய மகாவிரதமாகும். சிவராத்திரி என்றால் பட்டினியாக இருப்பது கண் விழித்து தூங்காமல் இருப்பது கோவிலுக்கு போவதுடன் மற்றும் நின்று விடுவதில்லை. இந்த விரதத்தினுடைய முழு பலனும் கிடைக்க வேண்டுமென்றால் நீங்கள் இதன் தத்துவத்தை உணர்ந்து வாழ்க்கை என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மனிதனின் மனம் அலை பாய்ந்து கொண்டே தான் இருக்கும். அதனை ஒரு நிலைப்பட செய்வதற்கு தியானம் அவசியம்.
மேலும் அலைபாயும் மனதை சிவன் மீது வைத்து தியானம் மேற்கொண்டாலும் மனிதனின் மூளைக்குள் ஏதோ ஒரு இடத்தில் முந்தைய ஆசைகளின் எண்ணங்கள் சிறு வடிவம் புதைந்து கிடக்கத்தான் செய்யும். அதையும் ஒழித்தால் தான் நம் பிறவியிலிருந்து விடுபட்டு சிவனை அடைய முடியும். அதற்காக சிவனை வழிபடும் நாளே சிவராத்திரி ஆகும். இந்த தத்துவத்தை உணர்ந்துதான் சிவனை லிங்க வடிவில் முன்னோர்கள் படைத்துள்ளனர். சிவனின் லிங்க படம் ஏறத்தாழ ஒரு முட்டை வடிவம் ஆகும். இதற்கு அர்த்தம் முட்டையை சுற்றி சுற்றி பார்த்தாலும் அதற்கு முதலும் கிடையாது முடிவும் கிடையாது. அதேபோலத்தான் சிவபெருமானும். அவர் முதலும் முடிவும் இல்லாதவர். இப்போது சிவராத்திரி உருவான கதை குறித்து பார்க்கலாம்.
தேவர்களும் அசுரர்களும் எப்போதும் சண்டை இட்டுக் கொண்டிருந்தனர். ஆனாலும் ஒரு ஒற்றுமை நிகழ்ச்சியில் விஷ்ணுவின் ஆலோசனைப்படி, அசுரர்கள் அறியாமையின் அமிர்தத்திற்காக தேவர் உங்களுடன் ஒன்றாக பாற்கடலை கடைந்தனர். மேலும் அவர் தேவர்களும் அசுரர்களும் சிவபெருமானின் கழுத்தில் அமர்ந்திருக்கும் பாம்பு மன்னன் வாசகியை பாற்கடலை கடைவதற்கு கயிறாக பயன்படுத்தினர். அப்படி கடைந்து கொண்டிருக்கும்போது வாசுகி கொடிய விஷத்தினை வெளியிட தொடங்கியது. அது அனைவரையும் கதிகலங்க வைத்தது. இதனை அடுத்து தேவர்களும் அசுரர்களும் உடனடியாக சிவபெருமானிடம் சென்று உதவி கேட்டனர்.
உடனடியாக சிவபெருமான் பாற்கடலில் உள்ள அனைத்து விஷயத்தையும் குடித்து அவர்களை காப்பாற்றினார். இது குறித்த அறிந்த மாதா பார்வதி தேவியார் மிகவும் கவலைபட்டு உடனடியாக சிவபெருமானிடம் ஓடிச் சென்று அவரின் உடம்பில் விஷம் பரவுவதை தடுப்பதற்காக சிவனின் தொண்டையை பிடித்தார். ஒரு பகல் மற்றும் ஒரு இரவு சிவபெருமானின் தொண்டையை பிடித்தபடி பார்வதி தேவியார் இருந்தார். இதனால் சிவனின் கழுத்துப் பகுதி நீல நிறமாக மாறியது. இதற்காகவே அவருக்கு நீலகண்டன் என்ற பெயரும் வந்தது. இந்த நேரத்தில் பார்வதி தேவியார் இரவும் பகலும் விரதம் இருந்ததால் மகா சிவராத்திரி அன்று இரவு முழுவதும் விரதம் இருப்பது மற்றும் தூங்காமல் கண் விழித்து சிவனை வணங்குவதும் பாரம்பரியம் ஆகிவிட்டது.
இவ்வாறு வணங்கும் சிவபெருமானை ஒவ்வொரு வருடமும், இந்து நாட்காட்டியின்படி பால்குண மாதத்தின் கிருஷ்ண பக்ஷ சதுர்தசி அன்று மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மகா சிவராத்திரி பிப்ரவரி 18ஆம் தேதி (மாசி 6ஆம் தேதி ) கொண்டாடப்படுகிறது. இந்து மதத்தில் மகா சிவராத்திரிக்கு சிறப்பு முக்கியத்துவம் உள்ளது. ஒவ்வொரு மாதத்தின் சதுர்த்தசி திதியும் சிவபெருமானுக்குரியது. ஆனாலும் மாசி மாத மஹாசிவராத்திரி நாளில், சிவனை வழிபாடு செய்தால் சிறப்பு ஏற்படும்.
அதிலும் இந்த வருடம் 2023ஆம் ஆண்டு பிரதோஷ விரதமும், மகா சிவராத்திரியும் ஒரே நேரத்தில் வருகிறது. பிரதோஷ விரதம் இம்முறை சனிக்கிழமையில் வருவதால், இது சனி பிரதோஷம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நாளில், விரதம் இருப்பவர்களுக்கு, சிவபெருமான் ஆண் குழந்தை பாக்கியத்தை வழங்குவதாக நம்பப்படுகிறது.