அமைச்சர் உதயநிதியின் மகன் இன்பநிதி தனது தோழியுடன் இருக்கும் சில புகைப்படங்கள் கடந்த மாதம் சோஷியல் மீடியாவில் வைரலாகியது. இந்நிலையில்  இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். அதாவது “இன்பநிதிக்கு 18 வயது ஆகிவிட்டது. இது அவர் தனிப்பட்ட உரிமை ஆகும். இது தொடர்பாக கேட்க பெற்றோரை தவிர வேறு யாருக்கும் உரிமை கிடையாது.

அவருக்கான சுதந்திரம் கொடுத்துள்ளோம். இந்த மாதிரி குடும்பத்தில் வரும்போது கேலி, சர்ச்சைகள் எதிர்கொள்வது வாடிக்கையே. 18 வயது சிறுவனுக்கான சுதந்திரத்தை கொடுக்கவேண்டும் என்பதை தன் மனைவி கிருத்திகா வலியுறுத்தியதாகவும் உதயநிதி தெளிவுப்படுத்தினார். ஆகவே தன் மகனை யாருடனும் ஒப்பிடாதீர் என்றும் அவர் குறிப்பிட்டார்.