தமிழ்நாடு முழுவதும் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கொள்முதல் விலையை பசும்பாலுக்கு ரூ.35ல் இருந்து ரூ.42, எருமைப் பாலுக்கு ரூ.44ல் இருந்து ரூ.51 ஆக உயர்த்த பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக பால் உற்பத்தியாளர்களுடன் அரசு சார்பில் இன்று பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சு வார்த்தையில் பால் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் நாளை முதல் ஆவினுக்கு பால் வழங்கப்போவதில்லை என பால் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி அமைச்சர் நாசருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை. இதனைத் தொடர்ந்து பால் உற்பத்தியாளர்கள் நாளை முதல் திட்டமிட்டபடி போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என அச்சங்க தலைவர் தெரிவித்துள்ளார். இதனால் பால் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.