இந்திய கிரிக்கெட் அணியினுடைய முன்னணி வீரராக வலம் வருபவர் உமேஷ் யாதவ். இவருடைய பந்துவீச்சு மிகவும் அபாரமானது ஆகும். இவருக்கு தான்யா என்ற மனைவி உள்ளார். அண்மையில் உமேஷ் தன் தந்தையை இழந்தார்.

இந்நிலையில் தற்போது உமேஷ் தான் பெண் குழந்தைக்கு தந்தையாக இருக்கும் மகிழ்ச்சியான தகவலை நேற்று சோஷியல் மீடியா பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் மகளிர் தினத்தில் பிறந்த பெண் தேவதைக்கு வாழ்த்துக்கள் என பதில் அளித்து வருகின்றனர்.