இந்தியாவில் கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் மக்களை சிரமப்படுத்தி வருகிறது. கொரோனாவை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்தது. எனினும் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கி இருக்கிறது. இதன் காரணமாக மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி இருக்கிறது.

இந்நிலையில் பொதுமக்கள் சுயக்கட்டுப்பாட்டுடன் முகக்கவசம் அணிவது, அடிக்கடி கைகளை கழுவுவது ஆகியவற்றை இயல்வாக்கிக்கொள்ள வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கிளஸ்டர் எனப்படும் குழு பாதிப்பு இல்லை. இனிமேல் தொற்று முடிந்துவிடும் என்று கூறமுடியாது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆகவே மக்கள் கட்டுப்பாடுகளை இயல்பாக்கிக்கொள்வது அவசியம் என்று அமைச்சர் தெரிவித்தார்.