கோலிவுட்டின் உச்ச நட்சத்திரங்கள் சிலர் படத்தின் முதல் நாள் வசூலை மார்க் ஆண்டனி திரைப்படம் முறியடித்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

புரட்சி தளபதி என அழைக்கப்படும் விஷால் மற்றும் நடிப்பு அரக்கன் எஸ் ஜே  சூர்யா ஆகியோர் நடிப்பில் நேற்று வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. நடிகர் விஷால் அவர்களுக்கு நீண்ட நாளுக்கு பிறகு சிறந்த படமாக  இப்படம் அமைந்துள்ளதாக அவரது ரசிகர்கள் மற்றும் சினிமா துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

வித்தியாசமான கதை களத்தை கொண்டு வெளியான இத்திரைப்படம் கோலிவுட்டின் உச்ச நட்சத்திரங்கள் சிலர் படங்களின் முதல் நாள் வசூலை  முறியடித்துள்ளதாக தற்போதைய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சிம்பு நடிப்பில் வெளியான பத்து  தல, தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி மற்றும் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாவீரன் உள்ளிட்ட திரைப்படங்களின் முதல் நாள் வசூலை மார்க் ஆண்டனி திரைப்படம் முறியடித்து சாதனை படைத்துள்ளது. பல வருடங்களாக தமிழ் சினிமாவில் பயணிக்கும் விஷால் அவர்களின் தொய்வான காலத்தில் அவரை மற்றும் அவரது ரசிகர்களை பூஸ்ட் செய்யும் விதமாக இப்படம்  அமைந்திருப்பதாக சினிமா வட்டாரங்கள்  தெரிவிக்கின்றன.