செய்தியாளர்களிடம் பேசிய முக்குலத்தோர் புலிப்படை நிறுவனர் கருணாஸ், நான் ஆரம்பத்தில் இருந்தே சொல்வதுதான். எங்களை பொறுத்தவரை நான் அரசியல்வாதிகள் அல்ல. நாங்கள் சமுதாய வாதிகள் தான். இந்த சமூகம்… ஒட்டுமொத்த சமூகத்தை பொறுத்துதான் நான் சொல்கிறேன்.  இந்த சமூகம்…  நான் தமிழ் மொழி சார்ந்த சமூகம். இந்த சமூகத்திற்கு இன்றைக்கு நடந்து கொண்டிருக்க கூடிய இடர்பாடுகள்,  கொடுமைகள் எல்லாம் நீங்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறீர்கள், மக்களும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

அண்மையிலே கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்கு மேலாக காவேரி நீர் பிரச்சினை தொடர்ச்சியாக நடந்து கொண்டிருப்பதை  உச்சநீதிமன்றம்,  காவேரி மேலாண்மை இவர்கள் அனைவரும்  தீர்ப்பளித்தும் கூட அதை நடைமுறைப்படுத்த மறுக்கின்ற ஒரு அரசு,  ஒரு ஆட்சி  இந்தியாவிலே நடந்து கொண்டிருக்கிறது. இதுபோல இது போன்ற காட்சிகளை எல்லாம் மத்திய அரசு ரசித்துக் கொண்டிருக்கிறது. இங்கே விவசாய மக்கள் பயிர்கள் எல்லாம் வாடி வதங்கி கொண்டிருக்கிறது.

இது எப்படி எடுத்துக் கொள்வது என்பது புரியவில்லை ?  ஆகவே இது போன்ற சூழ்நிலைகளில் இருந்து நம்மை நாம் காத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னால் ? நமது மக்கள் மொழி ரீதியாக… இனரீதியாக… ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய கருத்து. அந்த விதத்திலே நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து, அரசியலுக்கு அப்பாற்பட்டு…  அரசியல் என்பது நாம் நமக்கு உருவாக்கிக் கொள்வது தான்.

இவையெல்லாம்,  நம்முடைய அடிப்படை உரிமை. இதுல இப்ப பாத்தீங்கன்னா…  ஒரு கட்சிக்காரர்  அதை ஆதரிப்பதும்,  இன்னொரு கட்சிக்காரர் எதிர்ப்பதும்,  இது ரெண்டு பேரும் தன்னுடைய சுயநலத்துக்கு செய்யக்கூடிய அரசியல்…  எதிர்கால சந்ததியினர் இந்த மண்ணிலே வாழ்வதற்கு வழிகளை நாமே குழிதோண்டி புதைக்கிறோம் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும் என்பதுதான் என்னுடைய கோரிக்கை.

இந்திய சுதந்திரத்திற்கு போராடிய.. மாண்ட… மன்னர்களாக இருந்தாலும் சரி,  வெள்ளையர்களை எதிர்த்து மாண்ட மன்னர்களாக இருந்தாலும் சரி,   வெள்ளையர்களை எதிர்த்து சிறை சென்ற அரசியல்வாதிகளாக இருந்தாலும் சரி,  சுதந்திரம் அடைந்ததற்கு பிறகாக இந்த மக்களுக்காக போராடிய தியாகிகளாக இருந்தாலும் சரி,  அவர்களுடைய சிலைகள் கூண்டுக்குள்ளே இருப்பது இந்தியாவிற்கே அவமானம் தான். இந்த பிரச்சனை என்பது சமுதாய ரீதியாக… ஜாதி ரீதியாக… மதரீதியாக… மொழி ரீதியாக… மக்களை அரசியலுக்காக  சுயநலத்திற்கு பயன்படுத்துவதனுடைய வெளிப்பாடுதான் இது என்பதுதான் எங்களுடைய பார்வை என தெரிவித்துள்ளார்.