அண்மைக்காலமாக திமுக தலைமையிலான தமிழக அரசு  பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகள்,  நிர்வாகிகள் மற்றும் சமூக வலைதள பொறுப்பாளர்களை கைது செய்து வருகிறது. ஏற்கனவே பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சூர்யா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.  அண்ணாமலை மேற்கொண்டு வரும் என் மண், என் மக்கள் பாதயாத்திரையின்  இணை ஒருங்கிணைப்பாளராக இருக்கக்கூடிய அமர் பிரசாத்ரெட்டி உள்ளிட்ட 6 நிர்வாகிகள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

கைது செய்யப்பட்டவர்களை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்றைய தினம் நேரடியாக அவர்களுடைய இல்லங்களுக்கு  சென்று உறவினர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இந்த தகவல் அகில இந்திய பாஜக தலைமைக்கு தமிழக பாஜக சார்பில்  தெரிவிக்கப்பட்டது.இதன் அடிப்படையில் தற்போது தேசிய பாஜக தலைவர் ஜே பி நட்டா தற்போது தமிழகத்திற்கு அனுப்புவதற்காக நான்கு பேர் கொண்ட குழு ஒன்றை அறிவித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இந்த குழுவில் முன்னாள் மத்திய அமைச்சர் சதானந்த கவுடா தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார்.  அதேபோன்று மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த முன்னாள் போலீஸ் கமிஷனர்சத்திய பால் சிங் தற்போது பாஜக எம்.பி ஆக  இருக்கிறார். அதேபோன்று ஆந்திரா பிரதேச பாஜக மாநில புரந்தேஸ்வரி, பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர் பி.சி. மோகன் உள்ளிட்ட குழுக்களை அறிவித்து தற்போது வெளியிட்டு இருக்கிறார்.

இந்த குழு உடனடியாக தமிழகம் வந்து தமிழக பாஜக மாநில தலைவர்களை நேரடியாக சந்தித்து  அவர்களுடன் ஆலோசனை . மேற்கொள்ளும் மேலும் இந்த விகாரம் தொடர்பாக முக்கிய தலைவர்களை சந்தித்து விரிவான ஆலோசனை நடத்தி அதன் அடிப்படையில் இறுதி அறிக்கையை பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டாவிடம் விரைவில் சமர்ப்பிக்க இருக்கின்றார்கள்.