செய்தியாளர்களிடம் பேசிய முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ்,  பாஜக என்பது தமிழகத்திற்கு தேவையில்லாத ஒரு சித்தாந்தம். இதை ஆரம்பத்தில் இருந்தே நான் எதிர்த்து கொண்டிருக்கிறேன். அதையும் கடந்து,  புரட்சித்தலைவி அம்மா அவர்களால் தன்னிச்சையாக… தனித்துவமாக… ஒட்டுமொத்த இந்தியாவிற்கே முன்னோடியாக… முன்மாதிரியாக ஒரு முன்னேற்பாடுகளை கையில் எடுத்தவர் என்பது நாடறிந்த உண்மை. ஆனால் அவர்களுடைய மறைவுக்கு பிறவாக அதை தலைமை எடுத்து நடத்தியவர்கள் எப்பேர்ப்பட்ட தீர்மானங்களை எல்லாம் வரவேற்றார்கள் என்பதை நான் சொல்லத் தேவையில்லை, நாடறிந்த விஷயம்.

அந்த அடிப்படையிலே பாஜக – ஏடிஎம்கே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கூட்டணி இன்றைக்கு பிரிந்து இருப்பதாக சொல்வதிலே 99 சதவீதம் யார் ஒருவருக்கும் நம்பிக்கை இல்லை என்பதுதான் என்னுடைய கருத்து. அமலாக்கத்துறை துறையின் நடவடிக்கைகளை நாம் தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம்.

இந்த பிஜேபியினுடைய அரசாங்கத்தில் மட்டும்தான் அரசியல் ரீதியான கால்புணர்ச்சியிலே இது போன்ற நடவடிக்கைகளை தொடர்ச்சியாக செய்கிறார்கள். அவர்கள் சம்பந்தப்பட்ட ….அவர்கள் கட்சியைச் சார்ந்தவர்கள்…  அவர்கள் ஆதரிக்க கூடியவர்கள் இடத்தில் எல்லாம் இது போன்ற சோதனை நடப்பதில்லை. அவர்கள் எதிர்க்கட்சியாக யாரை நினைக்கிறார்களோ….

யாரை தன் பக்கம் இழுக்க நினைக்கிறார்களோ.. எந்த அரசை கவிழ்க்க நினைக்கிறார்களோ…. யாரை தன் வசப்படுத்த நினைக்கிறார்களோ…. அவர்கள் மீது மட்டும்தான் இந்த அமலாக்கத்துடைய ஏவப்படுகிறது. அது அமலாக்கத்துறை என்பதைவிட பிஜேபினுடைய ஒரு ஏவல் துறையாக தான் சராசரி மக்களே பார்க்கின்றார்கள் என தெரிவித்தார்.