தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று சட்டசபை கூட்டத்தின் போது தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் துறைகள் சேவை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது அமைச்சர் மனோ தங்கராஜ் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவர் தமிழகம் முழுவதும் உள்ள 20,000 அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு நம்பத் தகுந்த மற்றும் அதிவேகமான இணைய சேவையை 184 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

இதேபோன்று தமிழகம் முழுவதும் உள்ள குடும்பங்களுக்கு உள்ளூர் கேபிள் ஆப்ரேட்டர்களின் சேவைகளை பயன்படுத்தி நம்பத் தகுந்த மற்றும் அதிவேக இணைய சேவை வழங்குவதற்கு 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார். இதற்காக அரசு /பொது சந்தை நிறுவனத்திடம் இருந்து கடன் பெற்று வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது டிஜிட்டல் இடைவெளியை குறைப்பதற்கும், டிஜிட்டல் புரட்சியை ஏற்படுத்துவதற்கும், மக்களுக்கு அவர்களின் இருப்பிடத்திலேயே அரசின் சேவைகளை வழங்குவதற்கும் உதவும் என்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.