தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் முறையாக முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அது மட்டுமல்லாமல் நேற்று முதல் மருத்துவமனைகளில் கட்டாயம் 100% முடக்கவசம் அணிய வேண்டும் என அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் கொரோனா பரவலால் ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்ற செய்தி இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது .

இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அமைச்சர் சுப்பிரமணியன், கொரோனா பரவலால் ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்பது வதந்தியை என தெரிவித்துள்ளார் . கொரோனா பரவல் அதிகம் காரணமாக இனிவரும் வாரங்களில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என ஒரு சில ஊடகங்களில் தகவல் வெளியானது. இதை முற்றிலுமாக மறுத்துள்ள அமைச்சர் whatsapp உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்களில் உண்மை இல்லை என விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து தவறான தகவல் பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.