தமிழ் திரையுலகை பொறுத்தவரையிலும் பிரமாண்ட டைரக்டர் ஷங்கர் தான். இப்போது ராம் சரணை வைத்து தான் இயக்கி வரும் கேம் சேஞ்சர் படத்தின் சண்டைக் காட்சியிலும் ஆயிரம் ஸ்டன்ட் கலைஞர்களை நடிக்க வைத்து வருகிறார் ஷங்கர். இந்நிலையில் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தின் ஒரு பாடல் காட்சியில் 2000 நடன கலைஞர்களை நடிக்க வைக்கின்றனர்.

இதற்காக தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் உட்பட அனைத்து மொழிகளில் இருந்தும் நடன கலைஞர்களை 1 மாதத்திற்கு ஒப்பந்தம் செய்கிறார் லோகேஷ். காரணம் இந்த லியோ திரைப்படத்தின் பாடல் காட்சியை அவர் 30 நாட்கள் படமாக்க திட்டமிட்டு உள்ளார். இந்த ஒரு காட்சியை படமாக்கவே பல கோடி செலவு செய்கிறார்களாம். தற்போது லோகேஷ் லியோ திரைப்படத்தில் 2000 நடன கலைஞர்களை நடிக்க வைத்து ஷங்கரின் சாதனையை முறியடிக்க போகிறார்.