தமிழ் திரையுலகில் உச்ச உச்சநட்சத்திரமாக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இப்போது லியோ படம் உருவாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இந்த படத்தின் அடுத்தகட்ட சூட்டிங் மே 5-ம் தேதி தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் விஜய், திரிஷா, சஞ்சய் தத் போன்றோர் பங்கேற்க போவதாகவும் சொல்லப்படுகிறது.

லியோ படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்று தகவல் வெளிவந்த நிலையில், அது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. தளபதியின் அன்ஸீன் வீடியோ (அ) புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அதன்படி வெளிநாட்டில் தன் மனைவி மற்றும் மகளுடன் அமர்ந்து விஜய் உணவு உண்ணும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

https://twitter.com/AishThalapathy/status/1651830599320231936?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1651830599320231936%7Ctwgr%5E33747d05f7a3ed652c1eddb66c338d825b0a7a38%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fcineulagam.com%2Farticle%2Fvijay-unseen-family-video-viral-on-net-1682748802