தமிழ் சினிமாவின் பிரம்மாண்டம் என்று சொல்லும் அளவிற்கு பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்த வருடம் வெளியாகி 500 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்தது. மணிரத்தினம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, பிரகாஷ்ராஜ், பார்த்திபன், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியான நிலையில் 2 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் சாதனை புரிந்துள்ளதாக படக்குழு தற்போது அறிவித்துள்ளது. மேலும் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் இரண்டு நாட்களில் 100 கோடி வசூலித்ததால் இனி வருகிற நாட்களில் இன்னும் பல மடங்கு வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Conquering hearts and box office alike! #PS2 garners over a 100 crore collection worldwide#PS2RunningSuccessfully #CholasAreBack#PS2 #PonniyinSelvan2 #ManiRatnam @arrahman @madrastalkies_ @LycaProductions @RedGiantMovies_ @Tipsofficial @tipsmusicsouth @IMAX @primevideoIN… pic.twitter.com/M2xcZNXzNZ
— Lyca Productions (@LycaProductions) April 30, 2023