லோகேஷ் கனகராஜ் டைரக்டில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகும் படம் “லியோ”. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பாக லலித்குமார் தயாரிக்கக்கூடிய இப்படத்திற்கு, அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இதன் சூட்டிங் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது.

இந்த படம் வெளியீட்டிற்கு முன்னதாக இசை வெளியீடு, ஓடிடி உரிமம் என ரூ.350 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படத்தின் முதல் பாடல் தளபதியின் பிறந்தநாளான ஜூன் 22-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் லியோ திரைப்படத்தின் காட்சிகளை பார்த்த இசையமைப்பாளர் அனிருத், இப்படம் எந்த லெவல் போகும் என்று தெரியாது. அதுபோல் இருக்கு. நீங்க கண்ண மூடிட்டு எவ்வளோ பெரிய ப்ளாக் பஸ்டர் ஆகும் என்று யோசிக்கலாம் என தயாரிப்பாளர் லலித் குமாரிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.