தமிழ் திரையுலகில் “ரோஜா” திரைப்படத்தின் வாயிலாக இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர்.ரகுமான். இவர் தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் என உலகளவில் பிரபலமானவர். இப்போது இவர் இசைக்கு மயங்காத ரசிகர்கள் இல்லை என கூறும் அளவிற்கு வளர்ந்துள்ளார். இந்த நிலையில் ஏ.ஆர்.ரகுமான் பிரபல இயக்குனர் மணிரத்னம் அவர்களை அழ வைத்ததாக கூறப்படுகிறது. இது பம்பாய் படத்தின் சூட்டிங் சமயத்தில் நடந்து உள்ளது.

இதுகுறித்து இயக்குனர் ராஜீவ் மேனன் கூறியதாவது “பம்பாய் திரைப்படத்தின் சூட்டிங் சமயத்தில் ஹம்மா ஹம்மா பாடலுக்கு ஷூட் தொடங்கவுள்ள நிலையில், இசை தயாராக இல்லை. இருப்பினும் மறுநாள் ஷூட் தொடங்கவேண்டும் என்பதால் அன்று மாலையில் ஏ.ஆர்.ரகுமானிடம் சென்றபோது டியூன் கிடைக்கவில்லை என கூறினார்.

இதன் காரணமாக இயக்குனர் மணிரத்னம் மிகவும் கோபம் கொண்டார். அந்த நேரத்தில் ஏ.ஆர்.ரகுமான் என்னிடம் வேற ஒன்று இருக்கிறது என கூறி பம்பாய் படத்தின் தீம் மியூசிக்கை இசைத்தார். இதனை கேட்ட மணிரத்னம் கண்ணீருடன் “என்ன செய்திருக்கிறீர்கள் ரகுமான்? உங்களை படத்தை விட்டு தூக்க நினைத்தால் நீங்கள் என்னை அழவைத்துவிடீர்கள்” என தெரிவித்துள்ளார்.