SDPI மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அகில இந்திய செயற்குழு உறுப்பினர் KKSM தெகலான் பார்கவி,  அருமை பெருமக்களே.. கட்சி துவங்கிய 15 ஆண்டு கால கட்டங்களில்,  முஸ்லிம்களுக்காக எஸ்டிபிஐ கட்சி போராடியதை விட, இந்த நாட்டில் ஒடுக்கப்பட்ட விவசாயிகளுக்காக, ஒடுக்கப்பட்ட தலித்  பெருங்குடி மக்களுக்காக, ஒடுக்கப்பட்ட பாதிக்கப்படுகின்ற கிறிஸ்தவ பெருங்குடி மக்களுக்காக,

மணிப்பூரில் வதைபடுகிற, சுட்டுக்கொல்லப்படுகிற அந்த பழங்குடியின மக்களுக்காக என்று பல்லாயிரக்கணக்கான போராட்டங்களை, இந்த நாட்டிலேயே முன்னெடுத்திருக்கின்ற வேறு எந்த கட்சியையும் விட இந்த நாட்டில் அனைத்து சமுதாய மக்களுக்காக போராடியிருக்கின்ற மகத்தான ஒரே பேரியக்கம் சோசியல் டெமாக்ரடிக் ஆப் இந்தியா என்பதை நாங்கள் சொல்லிக் கொள்வதிலே இன்று பெருமிதம் கொள்கிறோம்.

அருமை பெருமக்களே.. இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகம் ஏதோ இஸ்லாமியர்களுடைய ஓட்டுகளுக்கு ஒட்டுமொத்த சொத்து என்று திமுகவின் அரிவருடிகள்  நினைத்து கொண்டிருக்கிறார்கள்.. நாங்கள் கேட்கிறோம்.. பாரதிய ஜனதாவோடு அதிமுக ஏற்கனவே கூட்டணியில் இருந்தது. இனிமேலும் அவர்கள் சேர்ந்து விடுவார்களே என்று கேள்வி  எழுப்புகிற திமுக ஆதரவாளர்களை பார்த்து கேட்கிறோம்.

திமுக பாரதிய ஜனதாவோடு கூட்டணி சேரவில்லையா?, மந்திரி பதவிகளில் இருந்து அனுபவிக்க வில்லையா? இனிமேலாவது திமுகவினுடைய முதலமைச்சர், திமுகவினுடைய தலைவர் நாங்கள் பாரதிய ஜனதாவோடு இனிமேல் என்றைக்கும் கூட்டணி வைக்க மாட்டோம் என்று சொல்லுகிற தைரியம், திராணி திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவர்களுக்கோ, அதனுடைய கூட்டணி கட்சித் தலைவர்களுக்கோ இருக்கிறதா என்று கேட்கிறோம். இதுவரை அவர்கள் எப்படி அறிவிக்கவில்லை என்று இங்கே நாங்கள் சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறோம் என தெரிவித்தார்.