பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கு வழக்கமாக மக்கள் தங்களின் சொந்த ஊருக்கு சென்று கொண்டாடி வருகின்றார்கள். பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னையிலிருந்து தங்களின் சொந்த ஊருக்கு செல்லக் கூடியவர்களுக்கு தமிழக அரசு சார்பாக சிறப்பு பேருந்து இயக்கப்படுவது வழக்கம்.

அதேபோல் இந்த ஆண்டும் மூன்று நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக பொங்கல் பண்டிகையொட்டி பெருங்களத்தூர் மற்றும் வண்டலூர் ஜிஎச் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஆண்டாண்டு ஏற்படும். அதேபோல் இந்த ஆண்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக நேற்றிலிருந்து கோயம்பேடு, தாம்பரம், அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. தொடர்ந்து நாளையிலிருந்து நான்கு நாட்கள் விடுமுறை என்பதால் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கு அனைவரும் ஒரே நேரத்தில் அரசு பேருந்துகள் மூலமும் அல்லது சொந்த வாகனங்கள் மூலமும் இரு சக்கர வாகனங்கள் மூலமும் சொந்த ஊருக்கு செல்வதால் பெருங்களத்தூர் ஜிஎச் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசலை போக்குவரத்து போலீசார் தற்போது சரி செய்து வருகின்றனர். நேற்றும் இந்த பெருங்களத்தூர் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதால் போக்குவரத்து நெரிசல் கருமையாக ஏற்பட்டுள்ளது.