நடிகர் விஜய் நடிப்பில் நாளை மறுதினம் லியோ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் லியோ என்ற தலைப்புடன் தெலுங்கில் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று சித்தாரா என்டர்டைன்மென்ட் என்ற நிறுவனம் சார்பில் நாக வம்சி ஹைதராபாத் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

அந்த வழக்கை விசாரித்த ஹைதராபாத் சிட்டி சிவில் நீதிமன்றம் லியோ படத்தினுடைய தெலுங்கு பதிப்பை மட்டும் வரும் 20ஆம் தேதி வரை வெளியிடுவதற்கு தடை விதித்து உத்தரவிட்டிருக்கிறது. 20ஆம் தேதி வரை படத்தை வெளியிட வேண்டாம் என சிட்டிசில் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

லியோ பட தயாரிப்பு நிறுவனத்திற்கு உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கின் உடைய விசாரணையை அன்றைய தினத்திற்கு ஒத்தி வைத்திருக்கிறது. இந்த உத்தரவு என்பது முழுக்க முழுக்க தெலுங்கு  தெலுங்கு பதிப்பிற்கு மட்டும் பொருந்தும்.மற்ற மொழிகளில் அந்த படத்தை வெளியிடுவதற்கு எந்த விதமான தடையும் இல்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.