தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு மாநகராட்சி ஆணையர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர், சிலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஆவடி, கோவை, மதுரை, நெல்லை மாநகராட்சி ஆணையர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கோவை மாநகராட்சியின் ஆணையராக சிவகுரு பிரபாகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆவடி மாநகராட்சி ஆணையராக இருந்த தற்பகராஜ் உயர்கல்வித்துறை துணை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆவடி மாநகராட்சி ஆணையராக ஷேக் அப்துல் ரஹ்மான் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஈரோடு மாநகராட்சி ஆணையராக சிவ கிருஷ்ணமூர்த்தி ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுரை மாநகராட்சி ஆணையராக மதுபாலன் ஐஏஎஸ்ஏமனம் செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாநகராட்சி ஆணையராக தாக்கரே சுபம் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுரை மாநகராட்சி ஆணையராக இருந்த பிரவீன்குமார் சென்னை மாநகராட்சி மண்டல துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாநகராட்சி ஆணையராக இருந்த பிரதாப் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சி வடக்கு மண்டல துணை ஆணையராக கட்டா ரவி தேஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா திருவாரூர் மாவட்ட கூடுதல் ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மதுரை மாநகராட்சி ஆணையராக இருந்த பிரவீன்குமார் சென்னை மாநகராட்சி மண்டல துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இப்படி பல்வேறு மாநகராட்சியின் ஆணையாளர்களாகவும், வெவ்வேறு துறைகளில் இருந்தவர்களும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு 8 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து பல்வேறு துறைகளில் பணியாற்றி வந்த ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் மாநகராட்சியின் ஆணையராக இருந்தவர்கள் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.