ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் விளாம்புண்டி வனப்பகுதியில் சிறுத்தை, யானை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதியில் கட்டியிருந்த நாய் குரைத்தது. விளாங்குடி வனப்பகுதியை ஒட்டி இருக்கும் கல்குவாரியில் கண்காணிப்பு கேமரா பொருத்தியுள்ளனர். இந்நிலையில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டதால் அங்கு வேலை பார்ப்பவர்கள் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை நுழையும் காட்சிகள் பதிவாகியுள்ளது.

இதனையடுத்து சிறுத்தை நாயை துரத்தி சென்றது. இதனால் நாய் அங்கிருந்து ஓடி சிறுத்தையிடம் இருந்து தப்பித்து உயிர் பிழைத்தது. இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் அங்கு பதிவாகிய கால் தடயத்தை ஆய்வு செய்து வருகின்றனர். இதற்கிடையே நாயை சிறுத்தை துரக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.