ஜம்மு காஷ்மீர் பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து இருநாட்டிலும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு பிரான்ஸ் நாட்டிலிருந்து ரஃபேல் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.

அதன்படி 63 ஆயிரம் கோடி மதிப்பில் 26 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை உத்திர பிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் விமர்சித்துள்ளார். அதாவது பயங்கரவாதிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மத்திய அரசாங்கம் ரஃபேல் விமானங்களை கொண்டு வந்துள்ளது என்று கூறியுள்ளார்.

அதுமட்டுமன்றி ஒரு பொம்மை விமானத்தை கையில் வைத்துக்கொண்டு அதில் எலுமிச்சை மற்றும் மிளகாய்கள் தொங்கவிட்ட படி வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.