தமிழ் படம், விக்ரம் வேதா, இறுதி சுற்று, மண்டேலா ஆகிய திரைப்படங்களை தயாரித்த YNOT ஸ்டுடியோஸ் சஷிகாந்த் இப்போது இயக்குனராக அறிமுகமாகும் முதல் படத்தில் நயன்தாரா முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். அதோடு இந்த படத்தில் மாதவன், சித்தார்த் ஆகியோர் நடிக்கின்றனர். “டெஸ்ட்” என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு சில நாட்களுக்கு முன் வெளியிட்டது.

இந்த படத்தின் சூட்டிங் மும்முரமாக நடந்து வருவதாகவும் படக்குழு தெரிவித்திருந்தது. அண்மையில் இப்படத்திற்கு பிரபல பின்னணி பாடகியான சக்தி ஸ்ரீ கோபாலான் இசையமைக்க இருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. இந்த நிலையில் டெஸ்ட் படத்தின் புது அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது, இத்திரைப்படத்தில் நடிகை மீரா ஜாஸ்மின் இணைந்திருப்பதாக படக்குழுவானது ஒரு போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.