தென்னிந்திய செங்குத்த மகாஜன சங்கத்திற்கு சிறப்பு அதிகாரியை நியமித்ததை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கல்வி நிறுவனங்களின் பெயர்களில் உள்ள சாதிகளை நீக்குவது தொடர்பாக விளக்கம் அளிக்க மார்ச் 14ஆம் தேதி வரை தமிழ்நாடு அரசுக்கு கால அவகாசம் கொடுத்துள்ளது. கை ரிஷாவை ஒழித்தது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை இந்த அரசு மேற்கொண்டுள்ள நிலையில், இந்த விஷயத்தில் அரசு ஒரு முடிவு எடுத்தால் நாளைய வரலாறு அதனை நினைவு கொள்ளும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

பள்ளிகளில் சாதி பெயர் இருக்கக் கூடாது என ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு குழு அறிக்கையை அரசு ஏற்றுக் கொண்ட போதும், இன்னும் சாதி நீடிக்கிறது. நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தாலும் சாதியை தூக்கி பிடிப்பவர்கள் அதனை கைவிட மாட்டார்கள் நிலவுக்கே சென்றாலும் சாதியை தூக்கிச் செல்வார்கள். படிப்படியாகவே மாற்றத்தை கொண்டு வர முடியும் அதற்கான நேரம் இது என்று அவர் தெரிவித்தார்.