சோழர் ஆட்சியில் வெட்டப்பட்ட 1,000 ஆண்டுகள் பழமையான வரலாற்று சிறப்பு மிக்க ஆனேக்கல் தொட்ட கெரே ஏரி, கடந்த 25 ஆண்டுகளாக பராமரிப்பின்றி அடர்ந்த தாவரங்களால் சூழப்பட்டு,  ஒரு ஏரி ஒன்று அங்கு இருப்பதைக் கண்டறிவதே  கடினம் என்ற  நிலையில் இருந்தது.

இந்நிலையில் 2022 ஆம் ஆண்டு, சந்தோஷ் குமார்,என்பவர்  தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆனேக்கல்லில் ஏரிகள் மற்றும் மழைநீர் வடிகால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான செயல்களில் ஈடுபட்டார். ஆனேகல் தொட்டா கெரே ஏரியின் மறுசீரமைப்பு செயல்முறை 2021 இல் தொடங்கியது. அதன் மறுசீரமைப்புக்கு ஸ்பான்சர்ஷிப் இல்லாததால், சந்தோஷ் குமார் தனது சொந்த நிதியைப் பயன்படுத்தி ஏரியை சுத்தம் செய்து புதுப்பிக்க தொடங்கினார். பெங்களூரு நகரின் முன்னாள் துணை ஆணையர் ஜே. மஞ்சுநாத் மற்றும் எல்.கே. அதீக் உள்ளிட்ட சில ஐஏஎஸ் அதிகாரிகளின் ஆதரவையும்  இதற்காக நாடினார்.

மறுசீரமைப்பு முயற்சியில் ,  ஏரியை காணாமல் போக செய்த  அடர்ந்த தாவரங்களை அகற்றுவது, ஏரிக்கு தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்வதற்காக ஏரியுடன் இணைக்கும் ஃபீடர் சேனல்களை மீட்டெடுப்பது, என  வெற்றிகரமான மறுசீரமைப்புக்கு பின்  ஏரி மீண்டும் உயிர்ப்பித்து இப்போது அது தண்ணீரால் நிரம்பியுள்ளது. இது அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.